×

திருமங்கலத்தில் மின் கணக்கிடும் மாதம் மாற்றம்

மதுரை, பிப். 19: மதுரை மாவட்டம் திருமங்கலம் மின்கோட்டம், மேற்கு திருமங்கலம் பிரிவிற்குட்பட்ட, பொன்னமங்கலம் (001), ஜெ.ஆலங்குளம் (003), செட்டிக்குளம் (007) பகுதிகள் உள்ள மின் இணைப்புகளின், மின்பயன்பாட்டின் அளவு இதுவரை ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது மின்வாரிய நிர்வாக காரணத்திற்காக, இப்பகுதியில் உள்ள மின் இணைப்புகள் பிப்.15 முதல் இரட்டைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்படும் என்றும், இதுதொடர்பாக சந்தேகம் ஏற்படும் மின்நுகர்வோர்கள், மேற்கு திருமங்கலம் பிரிவு, மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும், செயற்பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

Tags : Thirumangalam ,
× RELATED ஊதுபத்தியால் வந்தது வினை வீட்டில் தீப்பற்றி பணம் பொருட்கள் எரிந்து நாசம்