×

ஒட்டன்சத்திரத்தில் தீ தடுப்பு முகாம்

ஒட்டன்சத்திரம், பிப். 19: ஒட்டன்சத்திரம்- நாகணம்பட்டி சாலையில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கான தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம் தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் தீயணைப்பு- மீட்புப்படை நிலைய அலுவலர் தண்டபாணி விவசாயிகளுக்கு, நெருங்கி வரும் கோடைகாலத்தில் அவசர காலங்களில் ஏற்படும் தீயை எவ்வாறு அணைப்பது, தீ ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார். இதில் விற்பனைக்கூட மேற்பார்வையாளர் அருண்பிரகாஷ், இளநிலை உதவியாளர் அங்காளஈஸ்வரி மற்றும் விற்பனைக்கூட அலுவலர்கள், தீயயைப்புத்துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Fire Rescue Camp ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் தீ தடுப்பு முகாம்