×

அரசு பள்ளியில் திமுக மாவட்ட கவுன்சிலர் ஆய்வு

ஆத்தூர், பிப்.19: ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சினி, பைத்தூர் கிராமங்களில் செயல்படும்  அரசு உயர்நிலைப்பள்ளியில், திமுக மாவட்ட கவுன்சிலர் ஆய்வு செய்தார். ஆத்தூர் பகுதியில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு 25வது வார்டு உறுப்பினராக திமுகவை சேர்ந்த மீனா வெற்றிவேல் சமீபத்தில் நடைபெற்ற, மாவட்ட ஊராட்சி அமைப்பிற்கான தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்று ஆத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள மஞ்சினி, பைத்தூர் கிராமங்களில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்கு படிக்கும் மாணவ, மாணவியர்களின் கல்வி தரம் ஆசிரியர்களின் வருகை உள்ளிட்டவைகளை மாணவ, மாணவியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்காக மேஜை நாற்காலிகள் போதிய அளவு இல்லாமல் மாணவ, மாணவியர்கள் அவதி படுவதை கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு தேவையான மேஜை நாற்காலிகள் வழங்குவதாக உறுதியளித்தார்.

Tags : DMK ,Government School ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி