×

ஆட்டையாம்பட்டி பகுதியில் அறுவடை தாமதத்தால் வீணாகும் நெற்கதிர்கள்

ஆட்டையாம்பட்டி, பிப்.19: ஆட்டையாம்பட்டி பகுதியில் ஆட்கள் பற்றாக்குறையால் நெற்கதிர்கள் அறுவடை செய்யாமல் வயலில் வீணாகி வருகிறது. ஆட்டையாம்பட்டி சுற்றியுள்ள பிச்சம்பாளையம், சென்னகிரி, பைரோஜி, பாலம்பட்டி, பாப்பாரப்பட்டி பகுதியில் சுமார் 1000 ஏக்கரில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்தனர். 6 மாத கால நெற்கதிர்களை தை மாதம் அறுவடை செய்ய வேண்டும். இதில் ஒரு சில விவசாயிகள் ஆடி, ஆவணி என பல்வேறு மாதங்களில் நெற் பயிர்களை பயிரிட்டுள்ளனர். 6 மாத காலமான பயிர் தை மாதத்தில் அறுவடை செய்துவிட வேண்டும். இந்நிலையில் பெண்கள் 100 நாள் வேலைக்கு அதிகமாக செல்வதால், நெற்பயிர்களை அறுவடை செய்ய ஆட்கள் இல்லாமல் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் தை மாதமே அறுவடை முடியும் நிலையிலும், மாசி மாதம் பிறந்து ஒரு வார காலமாகியும் இதுவரை இங்குள்ள விவசாய நிலங்களில் பெரும்பாலான நெற் பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். நாள்பட்ட நெற்கதிர்கள் விவசாய நிலத்திலேயே சாய்ந்து வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் அரை நேரம் மட்டுமே வேலை செய்துவிட்டு கூலி வாங்கி வரும் நிலையில், விவசாய நிலத்தில் காலை முதல் மாலை 5 மணி வரை வேலை செய்தாள் சுமார் 25 படி வரை நெல் கூலியாக கிடைக்கிறது. இதனை ஒப்பிடும் போது நூறு நாள் வேலைத் திட்டத்தை விட இதில் வருமானம் அதிகம் என இருந்தாலும் வேலை செய்யாமல் கூலி வாங்கும் ஆட்களே அதிக அளவில் உள்ளனர்.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது