×

பாப்பாரப்பட்டி ஏரியில் கொட்டப்படும் கழிவுகள்

ஆட்டையாம்பட்டி, பிப்.19: ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி ஏரி சுமார் 45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியினால் சுற்றுப்புறத்தில் இருக்கும் விவசாய நிலம் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மழை இல்லாத காலத்திலும், ஏரியில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். இந்நிலையில் ஏரிகரையின் சாலை அகலப்படுத்தும் பணி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அதில் இருந்து ஏரிக்கரையோரம் பொதுமக்கள், தங்களது வீடுகளில் சேகரமாகும் கழிவு குப்பைகள், வீடுகளில் இடிக்கப்படும் செங்கல் மணல் போன்ற கலவைகளையும், கால்நடைகளின் கழிவுகளை ஏரியின் காலி இடத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏரியில் உள்ள மீன்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க கோரி,பொதுமக்கள் பலமுறை மனுக்கள் கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருகின்றனர். எனவே ஏரி கரையோரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Paparapatti Lake ,
× RELATED வறண்டு வரும் பாப்பாரப்பட்டி ஏரி