×

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து திமுக பொறுப்பாளர் மரியாதை

நாமக்கல், பிப்.19: வெண்ணந்தூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், நேற்று வெண்ணந்தூர் சென்றார். வெண்ணந்தூர் பேரூர் திமுக புதிய பொறுப்பாளராக நிமியக்கப்பட்டுள்ள  ராஜேஸ் தலைமையில், மாவட்ட பொறுப்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வெண்ணந்தூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, பேரூர் பொறுப்பாளர் ராஜேஸ், ஒன்றிய செயலாளர் துரைசாமி, ராசிபுரம் ஒன்றிய குழுதலைவர் ஜெகநாதன், நகர செயலாளர்  சங்கர் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Tags : Anna ,caretaker ,DM ,
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!