×

பர்கூர் அருகே நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.19: பர்கூர் அருகே, நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து, பர்கூர் அடுத்த கோட்டூர் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாமினை நடத்தி வருகிறது. இந்த முகாமில், “எனக்காக அல்ல, உனக்காக” என்ற சிறப்பு தலைப்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வித்யா துளசிராமன் தலைமை வகித்தார். பேராசிரியை சுகுணா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் பேசுகையில், ‘ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் பொருட்களை வழங்கும்போது, சரியாக எடை போட்டு வழங்க வேண்டும். எடை மோசடி செய்யக்கூடாது. கிராமப்பகுதிகளில் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீழ் வசதி என மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை எனில் கலெக்டருக்கும், நுகர்வோர் சங்க அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள மக்களிடையே, அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,’ என்றார். இந்த முகாமில் வேப்பனஹள்ளி நுகர்வோர் சங்க மாவட்ட தலைவர் கோபிநாத், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாவட்ட இணை செயலாளர் சையத்அஸ்கர், துணைத் தலைவர் சந்திரன், துணை செயலாளர் தமிழ்வாணன், பேராசிரியர்கள் ஷோபி, யோகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு, நுகர்வோர் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்கினர். வார்டு உறுப்பினர் கோவிந்தன் நன்றி கூறினார்.


Tags : Consumer Awareness Meeting ,Barkur ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு