×

கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரியில் வரும் 21ம் தேதி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி- பெங்களூர் சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா காம்ப்ளக்ஸ் கூட்ட அரங்கில் வருகிற 21ம் தேதி காலை 10 மணிக்கு கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு நான் தலைமை வகிக்கிறேன்.  முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில மகளிரணி தலைவர் டாக்டர். காஞ்சனா கமலநாதன், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே, இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு செங்குட்டுவன் எம்எல்ஏ., தெரிவித்துள்ளார்.

Tags : Eastern District ,Executive Committee Meeting ,DMK ,
× RELATED முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி...