×

பாலக்கோடு தாலுகாவில் கேசர்குளி அணை உபரிநீர் திட்டம் நிறைவேற்ற வேண்டும்

தர்மபுரி, பிப்.19:  தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து, கொமதேக மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பாலக்கோடு தாலுகாவில் கேசர்குளி அணை உள்ளது. இந்த அணையில் 50 அடி நீர் தேக்கி வைக்கும் வசதி உள்ளது. தற்போது 12 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த அணையின் மூலம் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த அணை நிரம்பவில்லை. இந்நிலையில், மழைக்காலத்தில் கேசர்குளி அணையிலிருந்து வீணாகும் உபரி நீரை, ஏரிகளுக்கு திருப்பி விடவேண்டும். திருமல்வாடி ஏரி, தாசன் ஏரி, குருகஞ்சேரி ஏரி, கோட்டூர் ஏரி வரை அணையின் உபரிநீர் கொண்டு நிரப்பலாம். இந்த அணையின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கணபதி, பேவுஅள்ளி, பெலமாரஅள்ளி, நல்லூர் ஆகிய 4 ஊராட்சிகளில் உள்ள 70 கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றினால், 70 கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Palakkad Taluk ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா