×

முத்துப்பேட்டையில் கோரையாற்றில் இளைஞர் சடலம் மீட்பு

முத்துப்பேட்டை, பிப்.19: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு குத்பா பள்ளிவாசல் எதிரே செல்லும் கோரையாற்றில் தற்போது குறைந்த அளவு தண்ணீர் செல்கிறது. இதனால் மறுகரை செல்பவர்களும், இயற்கை உபாதைகள் கழிக்க செல்பவர்களும் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை கடந்து சென்றவர்கள் இளைஞர் ஒருவரின் சடலம் ஆற்றின் தண்ணீரில் மிதந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில், அந்த இளைஞர் எலக்ட்ரீசியன் மற்றும் சமையல் வேலை பார்த்து வந்த முத்துப்பேட்டை தெற்குதெரு காதர் முகைதீன் மகன் அக்பர் அலி(38) என தெரியவந்தது.இதனையடுத்து அக்பர் அலியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Youth Corpse Recovery ,
× RELATED வாலிபர் சடலம் மீட்பு