×

அரசு பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, பிப்.19: திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்தார். ஆசிரியை உஷா வரவேற்றார்.கருத்தரங்கில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் ஜீவானந்தம் பேசுகையில், பெண்களின் நலன் சார்ந்த மற்றும் பாதுகாப்பு சம்பந்தமானது நலன் சார்ந்த விஷயத்தில் சத்தான உணவுகள், சிறுதானிய உணவான கேழ்வரகு, கம்பு, தினை போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும். செல்போன், டிவி நிகழ்ச்சிகளை தவிர்த்து ஜெயித்துக் காட்ட வேண்டும் என்றார்.

ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சந்தியா பேசுகையில், வளர் இளம் பெண்களுக்கு ஏற்படும் இரும்பு சத்துக் குறைபாட்டை விரிவாக எடுத்துரைத்தார். இரும்பு சத்து நிறைந்த காய்கறிகள் கீரைகள் பழங்கள் போன்றவற்றை குறிப்பிட்டு அரசு மூலம் பள்ளியில் வழங்கப்படும் இரும்பு சத்து மாத்திரைகள் தவறாது சாப்பிட வேண்டும் என்றார்.மேலும் 11 முதல் 19 வயது வரை பெண்கள் உடல் நலத்தோடு இருந்தால்தான் உள்ள நலன் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டம் தடுமாற்றம் உள்ள வயதாகும் உடல் நலம் பெருகிட கால்சியம், அயோடின் சத்துள்ள எள்ளு அத்திப்பழம், கடலைமிட்டாய், முருங்கை கீரை ஆகிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.முடிவில் ஆசிரியை அனிதா நன்றி கூறினார் நிகழ்ச்சியை தமிழாசிரியை பிரியா தொகுத்து வழங்கினார்.

Tags : Seminar ,Growing Up Young Girls ,Government School ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்