×

திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை நிர்வாகக் குழு கூட்டம்

திருவாரூர், பிப்.19: திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலதண்டாயுதம் முன்னிலை வகித்தார். இதில் துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, பொதுமேலாளர் காளிதாஸ் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் சின்னராஜ், சுரேஷ்குமார், செந்தில்ராஜ், சந்திரகுப்தன், பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலையினை மாநிலத்தில் சிறந்த பண்டக சாலையாக தேர்வு செய்து விருது வழங்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் பரிந்துரை செய்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Thiruvarur Consumer Cooperative Commodity Road Executive Committee Meeting ,
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...