×

ஊதிய உயர்வு வழங்க கோரி வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப்.19: ஊதிய உயர்வு வழங்க கோரி திருவாரூரில் நேற்று வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.11வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை விரைந்து முடிக்க வேண்டும், 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தினை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 31ம்தேதி மற்றும் இந்த மாதம் முதல் தேதி என 2 நாட்கள் வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் நாடுமுழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று பனகல் சாலையில் இயங்கி வரும் தேசிய வங்கி கிளை முன் வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் கிளை தலைவர் காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் செல்வராஜ், ராமலிங்கம், சங்கர்குமார், தர்மதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : protest ,Bank Employees Federation ,
× RELATED 6 மாத கடன் தவணை ஒத்திவைப்பு: மத்திய...