×

ெபான்னமராவதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பொன்னமராவதி,பிப்.19: பொன்னமராவதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.பொன்னமராவதி அதிமுக கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவினை வரும் 24ம்தேதி கொண்டாடுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பழனியாண்டி தலைமைவகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் பழனிச்சாமி,பொதுக்குழு உறுப்பினர் ராஜா, நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்குவது, மருத்துவமுகாம், ரத்ததானமுகாம் நடத்துவது, மாணவ மாணவிகளுக்கான நலத்திட்டங்கள் வழங்குவது,ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை நடத்துவது குறித்து நிர்வாகிகள் இடையே ஆலோசனைகள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் ஒன்றிய இணைச்செயலாளர் மோகனா சேகர், மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : AIADMK ,Executives Advisory Meeting ,Ponnamaravathi ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...