×

சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தால் சத்துணவு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை ஒன்றியக்குழு தலைவர் எச்சரிக்கை

சீர்காழி,பிப்.19: சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து வழங்கினால் சத்துணவு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சீர்காழி எல்எம்சி மேல்நிலைப்பள்ளி, சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எல்எம்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு முட்டை வழங்காமல் இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த ஒன்றிய குழு தலைவர் உடனடியாக முட்டையை அவியல் செய்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட்டார். இது போன்று இனி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து முட்டைகள் அவியல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.பின்பு ஒன்றியக்குழு தலைவர் கூறுகையில்,சீர்காழி பகுதியில் மாணவ-மாணவிகளுக்கு தரமான முறையில் உணவுகளை சமைத்து வழங்க வேண்டும். தரமற்ற முறையில் உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சத்துணவு மையங்களை சுகாதார முறையில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார் ஆய்வின்போது தலைமையாசிரியர்கள் கீதா, நாகை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் குலோத்துங்கன், ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் நடராஜன் உடனிருந்தனர்.

Tags : Union chairman ,
× RELATED குளத்தூரில் புதிய கலையரங்கத்திற்கு அடிக்கல்