×

தாந்தோணிமலையில் நிழற்குடை அருகில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை பயணிகள் எதிர்பார்ப்பு

கரூர், பிப். 19: கரூர் தாந்தோணிமலை பேருந்து நிலையத்தில் நிழற்குடையின் அருகே அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
நகராட்சியின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக தாந்தோணிமலை பகுதி உள்ளது. திண்டுக்கல், பாளையம், குஜிலியம்பாறை, வெள்ளியணை, தரகம்பட்டி, மணப்பாறை, உப்பிடமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் தாந்தோணிமலை வழியாக சென்று வருகின்றன.இந்நிலையில் கரூர் நோக்கி வரும் பெரும்பாலான பேருந்துகளில் சில அதற்கான நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல், கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலுக்கு செல்லும் ஆர்ச்சை ஒட்டி நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்களும், கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக மினிபஸ்கள் போன்றவை ஆர்ச் அருகே நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் முக்கிய போக்குவரத்து சமயங்களில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.எனவே கரூர் நோக்கி செல்லும் பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்குவதற்காக தாந்தோணிமலை நிழற்குடை அருகே நின்று செல்ல அதிகாரிகள் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பிரச்னை குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் நிலவி வரும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Travelers ,Tandonimalai ,Nandakadai ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...