×

முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் நாள் சிறப்பு கூட்டம் நாளை நடக்கிறது

கரூர், பிப். 19: முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது குறித்து கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(20ம் தேதி) காலை 11மணிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.அன்றைய தினம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்தோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Special Veterans Day ,Veterans Day ,
× RELATED முன்னாள் படை வீரர்கள் தினம் தாம்பரத்தில் 14ம் தேதி பேரணி