×

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.103க்கு ஏலம்

க.பரமத்தி, பிப். 19: கொப்பரை தேங்காய் முதல் ரகம் ஒரு கிலோவிற்கு ரூ.103க்கு ஏலம் போனது.கரூர் மாவட்டத்தில் இரு ஒன்றியங்களில் விளையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர்.அங்கு கொப்பரை தேங்காய்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 675 மூட்டைகளில் 31762 கிலோ கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது.கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.96, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.103க்கு ஏலம் போனது.
கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.1 குறைந்து ஏலம் போனது.இதே போல தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 2823 கிலோ எடையுள்ள 10907 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் குறைந்த விலையாக ரூ.30, அதிக விலையாக ரூ.37க்கு ஏலம் போனது.கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.2 குறைந்து ஏலம் போனது.

Tags : Auction ,Regulatory Sales Center ,
× RELATED ஏலக்காய் ஏலத்தை போடியில் நடத்த அனுமதி...