×

மானூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருட்டு

மானூர், பிப். 19: மானூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடி விட்டு, நைசாக பேசி தப்பிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள கானார்பட்டி பொருநை நகரைச் சேர்ந்தவர் கொத்தனார் ராஜ். இவரது மனைவி பொன்மணி (34). நேற்று பகலில் ராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது அவரது மனைவி வீட்டை பூட்டி சாவியை அதிலேயே விட்டு விட்டு வீட்டிற்கு அருகாமையிலுள்ள தோட்டத்திற்கு புல் அறுப்பதற்காக சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து பொன்மணி வீட்டிற்கு வந்தபோது வீட்டு வாசலில் பைக் ஒன்று நின்று கொண்டிருந்தது. வீட்டின் கதவும் திறந்திருந்ததால் பொன்மணி சந்தேகத்துடன் வீட்டிற்குள் செல்லமுயன்றபோது மர்மநபர் ஒருவர் வெளியே வந்தார். இதனால் திடுக்கிட்ட பொன்மணி அவரிடம் விசாரித்த போது, சுதாரித்துக் கொண்ட மர்மநபர் உன் கணவர் எங்கே, அவரை பார்க்கனும் என்று அதட்டலாக கேட்டுள்ளார். அவர் வேலைக்கு சென்றிருப்பதாக பொன்மணி கூறியதும், நான் மாலையில் வந்து அவரை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அவசரமாக தனது பைக்கை எடுத்துச் சென்று விட்டார்.இதனால் குழப்பமடைந்த பொன்மணி வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோ திறந்த நிலையில் துணிகள் கலைந்து கிடந்தன. பீரோவிலிருந்த 5 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி கம்மல், 1.5 கிராம் எடையுள்ள மற்றொரு கம்மல், ஒரு கிராம் எடையுள்ள மோதிரம், 30 கிராம் எடையுள்ள வெள்ளிக்கொலுசு ஆக 25 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து மானூர் காவல் நிலையத்தில் பொன்மணி கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ சையத் நிசார் அகமத் வழக்குப்பதிவு செய்து ஆசாமியைத் தேடிவருகிறார்.

Tags : Theft ,jewelery ,Mangalore ,
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்