×

பெண்கள் கோ-கோ அணிக்கு வீரர்கள் தேர்வு

பாவூர்சத்திரம், பிப் 19: தமிழ்நாடு மாநில கோ-கோ விளையாட்டு கழகத்தின் சார்பாக 44வது மாநில அளவிலான பெண்கள் கோ-கோ விளையாட்டு போட்டி தேனி மாவட்டம் லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா பள்ளியில் வருகிற 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.  இந்தப் போட்டிக்கு தென்காசி மாவட்ட பெண்கள் கோ-கோ விளையாட்டு வீரர்கள் தேர்வு நாளை (20ம் தேதி) பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்ட பள்ளிகள், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்ளலாம்.   இந்த போட்டி கோ-கோ மாவட்ட தலைவர் குகன், செயலாளர் ராமநாதன், பொருளாளர் ரிச்சர்ட், மற்றும் நிர்வாகிகள் சைரஸ், கணபதிராமன், சிவா, கனகராஜ், ஆதி விநாயகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

Tags : team ,Girls Go-Go ,
× RELATED 2017ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர்...