×

நாசரேத்தில் ஆபத்தான மின்கம்பம்

நாசரேத், பிப். 19:  நாசரேத் பஸ் நிலையம் முன் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட மின்கம்பமானது, முறையான பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. தற்போது சரிந்துள்ளதோடு எந்நேரத்திலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதன் வழியாக தினமும் ஏராளமான பஸ்கள், வாகனங்கள் சென்று வருகின்றன. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதசாரியாவும், சைக்கிள் மற்றும் பைக், மொபட் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் சென்று வருகின்றனர். இதைச் சுற்றிலும் வங்கி, திருமண மண்டபம் மற்றும் கடைகள் நிறைந்துள்ள நிலையில் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதுகுறித்து நாசரேத் நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவுதலைவர் பீட்டர் கூறுகையில், ‘‘இந்த மின் கம்பத்தால் மிகப்பெரிய ஆபத்து நிலவும் அபாயம் உள்ளது. இதன் வழியாக செல்பவர்கள் மின் கம்பம் கீழே விழுந்து விடுமோ என்றஅச்சத்தில் பயணிக்கும் அவலமும் தொடர்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது தலையிட்டு விரைவில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு ’’ என்றார்.

Tags : Nazareth ,
× RELATED நாசரேத் அருகே முதியவர் தற்கொலை