×

பெருமாட்டுநல்லூரில் பூட்டியே கிடக்கும் விஏஓ அலுவலகம்

கூடுவாஞ்சேரி, பிப்.19: கூடுவாஞ்சேரி அருகே பெருமாட்டுநல்லூரில் விஏஓ அலுவலகம் பூட்டியே கிடப்பதாகவும், இதனை சரிவர திறக்கப்படாததால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் ெபாதுமக்கள் புகார் கூறுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில், பெருமாட்டுநல்லூர், கன்னிவக்கம், அண்ணாநகர், பாண்டூர், தர்காஸ் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெருமாட்டுநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், விஏஓ அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பட்டா, சிட்டா, அடங்கல், ஜாதி, இருப்பிடம், வருமானம், வாரிசு, முதல் பட்டதாரி, பிறப்பு மற்றும் இறப்பு சான்று உள்பட பல்வேறு சான்றுகள் பெறுவதற்கும், ஆன்லைனில் பதிவு செய்த சான்றுகளை சரிபார்க்கவும் பொதுமக்கள் தினமும் காலை முதல் மாலை வரை காத்திருக்கின்றனர். ஆனால், விஏஓ அலுவலகம் சரிவர திறக்கப்படாததால், பொதுமக்கள் சான்றிதழ்களை பெற முடியாமல், அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மற்றும் பக்கத்து ஊராட்சியான குமிழி ஊராட்சியில் குமிழி, அம்மணம்பாக்கம், மேட்டுப்பாளையம், ஒத்திவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் சேர்த்து ஒருவரே கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கிறார். பெருமாட்டுநல்லூர் மற்றும் குமிழி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு தேவையான பல்வேறு  சான்றிதழ்களை பெற தினமும் அலைக்கழிக்கப்படுகின்றனர். விஏஓவை செல்ேபானில் தொடர்பு கொண்டாலும், எடுப்பதில்லை. அப்படி எடுத்தாலும் இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று கூறி போனை கட் செய்கிறார். சில நேரம் அலுவலகம் திறந்து வைத்தாலும் விஏஓ இருப்பதில்லை.  இதனால் பல்வேறு சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறோம். இதில் வேலைக்கு சரிவர செல்ல முடியாமலும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி விடுமுறை கொடுக்கவும் மறுக்கின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு, வண்டலூர் தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : VAO ,office ,
× RELATED சாத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!