10ம் வகுப்பு செய்முறை தேர்வு தனித்தேர்வர்களுக்கு 7 மையங்கள் அறிவிப்பு

திருப்பூர், பிப். 19:  10ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் மார்ச் 17ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் அதற்கு முன்னதாக செய்முறை தேர்வை நடத்தி முடித்திட தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் செய்முறை தேர்வு வருகிற 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற உள்ள நிலையில், தனித்தேர்வர்களுக்கு வருகிற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வு எழுத 7 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் பழைய பாடத்திட்டத்துக்கு திருப்பூர் கல்வி மாவட்டத்தில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணவிகளுக்கு பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை கல்வி மாவட்டத்தில் சினிவாசா வித்யாலயா பள்ளி, பல்லடம் கல்வி மாவட்டத்தில் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக்பள்ளி, தாராபுரம் கல்வி மாவட்டத்தில் பொன்னு மெட்ரிக் பள்ளி ஆகிய 5 பள்ளிகளிலும், புதிய பாடத்திட்டத்துக்கு திருப்பூர் சுப்பையா மெட்ரிக் பள்ளி, தாராபுரம் சிந்து மெட்ரிக் பள்ளி ஆகிய 2 பள்ளிகள் என மொத்தம் 7 பள்ளிகள் செய்முறை தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: