×

இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து தாராபுரத்தில் இன்று கடையடைப்பு

சத்தியமங்கலம், பிப்.19: இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து தாராபுரத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என  இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். இது குறித்து சத்தியமங்கலத்தில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:குடியுரிமை திருத்த சட்டத்தை இந்து முன்னணி வரவேற்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம் உள்ள நாடுகளில் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டதால் 23 சதவீதம் இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 1.7 சதவீதமாக குறைந்தது. தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர் முஸ்லிம்களை தூண்டிவிட்டு அரசியல் ஆதாரம் தேட முயற்சிக்கின்றனர். வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என தவறான வதந்தி பரப்பி விடப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சபாநாயகர் கூறியதை இந்து முன்னணி பாராட்டுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போராட்டம் நடத்தியதோடு தாராபுரத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து இன்று தாராபுரத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது மாநில செயலாளர் செந்தில்குமார், ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : attack ,Tarapuram ,
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...