×

ஊட்டி ஏடிசி பகுதியில் இன்டர்லாக் கல் பதிக்கும் பணி துவக்கம்

ஊட்டி, பிப். 19:ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஏடிசி., பஸ் நிலையம் பகுதியில் 14வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் இன்டர்லாக் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.   வெளியூர் செல்லும் பஸ்கள், கிராமப்புறங்களுக்கு செல்லும் முக்கிய சாலை சந்திப்பாகவும், பஸ் நிலையமாகவும் ஏடிசி., பகுதி உள்ளது.  மழைக்காலங்களில் இப்பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கின்றனர். இந்நிலையில், ஏடிசி., சாலை சாந்திப்பு பகுதியில் இன்டர்லாக் கற்கள் பதிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஏற்கனவே இருந்த தார் சாலை அகற்றப்பட்டு தற்போது இன்டர்லாக் கற்கள் பதிப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை துவக்கியுள்ளது. 14வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் இச்சாலை சீரமைக்கப்படவுள்ளது. அதேபோல், மக்கள் அதிகம் பயன்படுத்தும் எட்டினஸ் சாலையில் பழைய ஆவின் முன் பகுதியில் உள்ள சாலையும் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மக்கள் அதிகம் கூடும் ஏடிசி., பகுதியில் சாலை பழுதடைந்து மக்கள் பாதிக்கின்றனர்.

எனவே, நிரந்தரமாக இச்சாலையை சீரமைக்கும் நோக்கில், இப்பகுதியில் உள்ள சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்படுகிறது. இதன் மூலம் மழைக்காலங்களில் அப்பகுதியில் தண்ணீர் தேங்க வழியில்லை. இதே போன்று பழைய ஆவின் முன் பகுதியிலும் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்படும். மேலும், நகரின் நுழைவு வாயில் பகுதியான சேரிங்கிராஸ் பகுதியிலும், இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் விரைவில் துவக்கப்படும். இப்பணிகள் அனைத்தும் கோடை சீசன் துவங்கும் முன் முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வந்த ஏடிசி., பகுதியில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags : area ,Ooty ADC ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...