×

சத்தியமங்கலத்தில் லாரி ஒர்க் ஷாப்பில் திடீர் தீ விபத்து

சத்தியமங்கலம், பிப்.19: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் லாரி பழுது பார்க்கும் ஒர்க் ஷாப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ஆயில் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எஸ்ஆர்டி கார்னர் பகுதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபம் அருகே விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான லாரி ஒர்க் ஷாப் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடை உள்ளது. இவர், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். இரவு 9.30 மணியளவில் ஒர்க்ஷாப் திடீரென தீப்பிடித்து எரிவதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து அரைமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், ஒர்க்ஷாப் கொட்டகை முழுவதும் எரிந்ததோடு லாரி உதிரிப்பாகங்களும் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்தின்போது அருகே இருந்த வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fire ,truck workshop ,Sathyamangalam ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா