×

சென்னிமலை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் காய்ந்த புல்லில் தீப்பிடித்தது

சென்னிமலை, பிப்.19: சென்னிமலை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் காய்ந்த புல்லில் தீப்பிடித்தது. சென்னிமலை அருகே புதுவலசு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. (55) விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் நல்லபாளி திருமலை நகர் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் விவசாய பயிர்கள் எதுவும் இல்லாததால் புல் வளர்ந்து காய்ந்து கிடக்கிறது. இந்த நிலத்தின் வழியே சென்ற மின்கம்பி நேற்று அறுந்து விழுந்ததால் காய்ந்து கிடந்த புல்லில் தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதால் சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான புற்கள் கருகியது.

Tags : Chennimalai ,
× RELATED குடோனில் தீவிபத்து