×

ஊதிய உயர்வு வழங்கக்கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், பிப். 18: 20 சதவிகிதம் ஊதிய உயர்வு கோரி ராஜபாளையத்தில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள கனரா வங்கி முன்பு, அனைத்து வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தலைமையில், 20 சதவிகித ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பூதத்தான் முன்னிலை வகித்தார். பேங்க் ஆப் இந்தியா ஊழியர் சங்க தேர்வு குழு உறுப்பினர் ராமசுப்பிரமணியன், அனைத்து வங்கி ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ராஜீ, தேசிய வங்கி ஊழியர் சம்மேளன கிளை செயலாளர் ஹரிஹரன், சிண்டிகேட் வங்கி கமிட்டி உறுப்பினர் உலகநாதன், பேங்க் ஆப் பரோடா தேர்வு குழு உறுப்பினர் கார்த்திக் மற்றும் 10 பெண்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். வாரம் 5 நாட்கள் வேலை, அடிப்படை ஊதியத்துடன் சிறப்பு அலவன்ஸ், 01.10.17 முதல் நிலுவை தொகை, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தில் முன்னேற்றம் வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு சம ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் கோஷமிட்டனர்.

Tags : Bank employees ,
× RELATED 6 மாத கடன் தவணை ஒத்திவைப்பு: மத்திய...