×

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் சோத்துப்பாறை அணையில் குறைந்து வரும் நீர்மட்டம் விவசாயிகள் கவலை

பெரியகுளம், பிப். 18: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 126.28 அடி. கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இருக்கும். தற்போது கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணையில் நீர்வரத்து மிக குறைந்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 101.8 அடி. நீர்வரத்து வினாடிக்கு 9 கனஅடி. அணையிலிருந்து விவசாயத்திற்காக 25 கனஅடியும், குடிநீருக்காக 3 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : catchment area ,Sotuparai Dam ,
× RELATED வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக குறைவு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை