×

ஆந்திராவிலிருந்து உசிலைக்கு கடத்தப்பட் 120 கிலோ கஞ்சா திருமங்கலம் அருகே பறிமுதல்

திருமங்கலம், பிப்.18: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள சிந்துபட்டி பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார் மற்றும் திருமங்கலம் டிஎஸ்பி அருண் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பலிடம் கிலோ கணக்கில் கஞ்சா இருந்தது. போலீசார் ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியது போது ஆந்திராவிலிருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுதற்காக கஞ்சாவை கொண்டுவந்தது தெரியவந்தது. போலீசார் ஆட்டோவிலிருந்த 120 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆட்டோவில் வந்த உசிலம்பட்டி அருகேயுள்ள வெள்ளிமலைபட்டியை சேர்ந்த ஆனந்த்(32), பாக்கியராஜ்(30), முருகன்(30) மற்றும் காசிமாயன்(30) ஆகிய நான்குபேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய மகாராஜன் மற்றும் இளங்கோ ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags : Ganja ,Usila ,Thirumangalam ,Andhra Pradesh ,
× RELATED பைக்கில் கஞ்சா கடத்தியவர் கைது