×

திருமங்கலம் பிகேஎன் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருமங்கலம், பிப்.18: திருமங்கலம் பிகேஎன் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து துவக்கிவைத்தார். கல்லூரி முதல்வர் கணேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணன் பட்டமளிப்பு விழா உரையாற்றி மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் இளங்கலை மற்றும் முதுகலையை பிரிவுகளைச் சேர்ந்த 300 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதே போல் காமராஜர் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி விளையாட்டு விழா நடந்தது. வித்யாசாலா கமிட்டி தலைவர் ரத்னம் தேசிய கொடியையும், நாட்டாமை நல்லதம்பி ஒலிம்பிக்கொடியையும், கல்லூரித்தலைவர் விஜயராஜன் கல்லூரி கொடியையும் ஏற்றிவைத்தனர். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை திருமங்கலம் டிஎஸ்பி அருண் ஏற்றுக்கொண்டார். மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags : Thirumangalam BKN College Graduation Ceremony ,
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு