×

செல்லூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கலெக்டரிடம் மக்கள் புகார்

மதுரை, பிப். 18: மதுரை செல்லூரை சேர்ந்த நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் சங்கரபாண்டி தலைமையில் அந்த அமைப்பினர் கலெக்டர் வினயிடம் நேற்று புகார் மனு கொடுத்தனர். அதில், ‘‘செல்லூர் குலமங்கலம் ரோட்டில் புதிதாக மதுபானகூடம், மனமகிழ்மன்றம் என்ற பெயரில் திறக்க தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே அதே பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் குடிமகன்களால் பொதுமக்களுக்கு தினமும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய மதுபானக்கடை திறக்கப்பட இருக்கிறது. இப்பகுதியில் உள்ள இளைஞர்கள், தினசரி கூலி வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை இந்த கடைகளில் தொலைக்கின்றனர். புதிய மதுபானக் கடை வரவால், இவர்கள் மதுவுக்கு மேலும் அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கடையை திறக்க கூடாது என தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.இழப்பீடு கேட்டு தாய் மனு:மேலூர் அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்த ஜெயா நேற்று கலெக்டர் வினயிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், பொறியியல் பட்டதாரியான எனது மகன் ரம்பு கடந்தாண்டு ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக பல்வேறு மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் ரூ.5 லட்சம் இழப்பீடு, அரசு வேலை கொடுப்பதாக அறிவிக்கப்பட்டு, முன் பணமாக ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி ரூ.3 லட்சம், அரசு வேலை பிறகு தருவதாக அதிகாரிகள் கூறினர்.ஆனால் இதுவரை இழப்பீடு தொகையும், அரசு வேலையும் தரவில்லை. எங்களது குடும்பம் வறுமையில் வாடுகிறது. எனவே, இழப்பீடு தொகையும், அரசு வேலை வழங்குமாறு தெரிவித்திருந்தார். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கலெக்டர் அவரிடம் உறுதியளித்தார்.

Tags : anti-collector ,
× RELATED இரட்டை வாய்க்கால் பஸ் நிறுத்தம் அருகே...