×

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை,பிப்.18: வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த விளக்க ஆர்ப்பாட்டம் பாளையில் நேற்று நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். காலதாமதமாகி வரும் இருதரப்பு ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் மார்ச் 11, 12, 13 மற்றும் ஏப் 1 முதல் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில், காலாவதியாகி 27 மாதங்களை கடந்த நிலையில் ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பாளை இந்தியன் வங்கி கிளை முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ஞானசுந்தரி தலைமை வகித்தார். வங்கி அலுவலர் சங்கம் சக்தி வேலாயுதம், சிவசங்கரன், கணபதிராமன், சரவணராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Tags : Bank employees ,
× RELATED இந்தியா 2 வகைகளில் பொருளாதார பின்னடைவை...