×

அரசு பஸ்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் போக்குவரத்து கழக எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தல்

நெல்லை, பிப்.18: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழக எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுக்குழுக்கூட்டம் பாளையில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. துணை தலைவர்கள் சுரேஷ் சுப்பிரமணியன், மாரி, பொதுச்செயலாளர் முத்துக்கிருஷ்ணன், செயலாளர்கள் பிரம்மநாயகம், வைரவிநாயகம், பொருளாளர் சோமு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழகத்தில் நிலவி வரும் இரட்டை முறை சம்பளத்தை ஒழித்து, அனைவரையும் அரசு ஊழியராக்க வேண்டும். பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகை மற்றும்  ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க அரசு நடவடிக்கை வேண்டும். தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த சொசைட்டி பணத்தை போக்குவரத்து கழகம் திரும்ப சொசைட்டியில் செலுத்த வேண்டும். மோட்டார் வாகன சட்டப்படி ஓட்டுனர், நடத்துனர்களுக்கு கூடுதல் பணி செய்ய நிர்ப்பந்தம் செய்வதை அதிகாரிகள் கைவிட வேண்டும். ஓட்டுநர், நடத்துனர், தொழில் நுட்ப பணியாளர்களை மாற்று பணி செய்ய அனுமதிக்க கூடாது. விபத்துக்களை தவிர்க்க பஸ்களை முறையாக பராமரிப்பு பணி செய்ய வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அன்று பிஎப், கிராஜூட்டி பணத்தை முறையாக வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags : Employees Union of Transport Corporation Employees Union ,
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா