×

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி

கயத்தாறு, பிப். 18:  காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில்  கடந்த ஆண்டு பிப். 14ல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம்,  கயத்தாறு அடுத்த சவலாப்பேரி கிராமம், மேலத்தெருவை சேர்ந்த கணபதி மகன்  சுப்பிரமணியன் (30) உள்ளிட்ட நகரில் பணியாற்றி வந்த சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். அவரது ஓராண்டு நினைவுதினத்தையொட்டி சுப்பிரமணியனின் சொந்த ஊரான சவலாப்பேரியில் கட்டப்பட்ட மணிமண்டபம் திறப்பு விழா  நடந்தது.
தலைமை வகித்த கயத்தாறு  யூனியன் சேர்மன்  மாணிக்கராஜா, மணிமண்டபத்தை திறந்துவைத்து, சுப்பிரமணியனின் படத்திற்கு  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.   இதில் இலக்கிய அணி மாநில செயலாளர் ஆர்எஸ்கே துரை, கோவை மண்டல செயலாளர் சேலஞ்சர் துரை, நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் பரமசிவ அய்யப்பன், நெல்லை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பொய்கை மாரியப்பன், தெற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.குமரேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜன், தெற்கு மாவட்டச் செயலாளர் புவனேஸ்வரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் பால்கண்ணன், ஹென்றி தாமஸ், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் தாழை மீரான், மாவட்ட துணைச்செயலாளர் பாஸ்கர் சகாயம், மானூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கங்கை மாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கணபதி பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள், சர்வகட்சியினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி  செலுத்தினர்.

உடன்குடி: பரமன்குறிச்சி பஜாரில் நடந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகரத் தலைவர் ராஜன் தலைமை வகித்தார். கிளை அமைப்பாளர்கள் முருகன், மானாடு சுடலைக்கண், சிவபெருமாள், ராஜகுமார், திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் பிரபாகரன், பாஜ நிர்வாகிகள் ரத்தினபாண்டி, முத்துகணேஷ், மோகன், இசக்கிமுத்து, ராஜா, கணேசன், சக்திவேல், பாலமுருகன், பொன்முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்று வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் உடன்குடி பஜாரில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஆத்திசெல்வம் தலைமையில் இந்து முன்னணியினரும், இந்து மகாசபா அமைப்பினர் மாநில நிர்வாகி தலைமையிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags : tribute ,attack ,Pulwama ,soldiers ,CRPF ,
× RELATED காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப்...