×

குளத்தூர் பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு ஆலோசனை கூட்டம்

குளத்தூர், பிப்.18: குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிபழைய மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1986-87ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமார் தலைமையில் நடந்தது. பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர் சுப்புராஜ் வரவேற்றார். தாமோதரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திருமணித்தங்கம், வேல்முருகன், வேல்ராஜ், அழகுபாண்டி, ஆதிராமசுப்பிரமணியன், ஆறுமுகச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் வருகிற மே மாதத்தில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துவது. பழைய ஆசிரியர்களை அழைத்து கவுரவப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. பழைய மாணவர் சங்க உறுப்பினர் சரஸ்வதி நன்றி கூறினார்.

Tags : Meeting ,Klathoor School ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...