×

அடையல் ராஜரத்தினம் நினைவுதினம் தூத்துக்குடியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு

நெல்லை, பிப். 18: தூத்துக்குடியில் அடையல் ராஜரத்தின நாடார் முதலாம் ஆண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் உள்ள நேசகரங்கள் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு அடையல் ராஜரத்தின அறக்கட்டளை சார்பாக  ஆதிதிராவிட மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஸ்டீபன் செந்தமிழ் பாண்டியன் மதிய உணவு வழங்கினார்.  நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணி சுரேஷ்குமார், கட்சி பிரமுகர் மாரியப்பன், செல்வகுமார், 49வது வார்டு காங்கிரஸ் தலைவர் மனுவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சோலைராஜ், ரவிக்குமார் மற்றும் கருப்பசாமி, தனபால், துரைபாண்டியன், மாரிமுத்து, பிரின்ஸ், சித்திரை குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : orphans ,Uthayal Rajaratnam Memorial Lunch ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் இருந்து 913 தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பி வைப்பு