கடத்தூர் பகுதியில் மா மரங்களில் பூத்து குலுங்கும் மா பூக்கள்

கடத்தூர், பிப்.18: கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான ஒடசல்பட்டி, ரேகடஅள்ளி, மோட்டாங்குறிச்சி, புட்டிரெட்டிபட்டி, ராமியணஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மா மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் நாட்டு மாங்காய்களும், ஒட்டுவிதை ரகங்களும் அதிகமாக உள்ளது. இங்கு விளையும் மாங்காய், ஊறுகாய் போடுவதற்காக வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாம்பழங்கள் உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள மா மரங்களில், அதிகளவில் பூக்கள் பூத்து குலுங்குகிறது. இதனால் நடப்பாண்டில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories:

>