×

தர்மபுரி அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

தர்மபுரி, பிப்.18: தர்மபுரி ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே, இடிந்து விழும் நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் ஏற்றி, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றும்போது, நான்கு தூண்களும் அசைவு தன்மையுடன் சாய்கின்றன. இதனால் தண்ணீர் தொட்டி கீழே விழுந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுந்தரம் கூறுகையில், ‘ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி 20 ஆண்டுகள் ஆகிறது. இதனால் தொட்டியில் தண்ணீர் ஏற்றும்போது, நான்கு தூண்களும் ஆடுகின்றன. இதனால் உடைந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தண்ணீர் தொட்டியின் தூண்களை ஆய்வு செய்து, உடனே புதிய தொட்டி கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’என்றார்.

Tags : Dharmapuri ,
× RELATED கிடு கிடுக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி