×

மதகொண்டப்பள்ளியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

கிருஷ்ணகிரி, பிப்.18: மதகொண்டப்பள்ளியில் நடந்த ஆணழகன் போட்டியில் கிருஷ்ணகிரியைச் சோந்தவர்கள் வெற்றி பெற்றனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம், மதகொண்டப்பள்ளி ஸ்டார் பிட்னஸ் ஜிம் சார்பில் முதலாமாண்டு ஆணழகன் போடடி நடந்தது. இப்போட்டியை மாவட்ட ஆணழகன் சங்கத் தலைவர் கோபால் துவக்கி வைத்தார். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 55 கிலோ எடை பிரிவு முதல் 75 கிலோ எடை பிரிவு வரை தனித்தனியாக போட்டிகள் நடந்தது.  இதில், 75 கிலோ எடை பிரிவில் கிருஷ்ணகிரி சோமார்பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் முதலிடம், பழையபேட்டை ஆனந்தகுமார் இரண்டாமிடம், ராசு வீதியைச் சேர்ந்த முபாரக் மூன்றாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை, மதகொண்டப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் சந்ரு, திமுக கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆணழகன் சங்க செயலாளர் அமர், பொருளாளர் ஆசாம் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஸ்டார் பிட்னஸ் ஜிம் உரிமையாளர்கள் தவ்ஷிப், ஷெரிப் இம்ரான் ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஒவ்வொரு எடை பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்கள் வரும் ஏப்ரல் மாதம் கரூரில் நடைபெறும் ஆண்கழகன் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.


Tags : men ,Madhakondapalli ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!