×

ராசிபுரத்தில் ₹53 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம், பிப்.18: ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் ₹53 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆர்.கவுண்டம்பாளையம் கிளையில், திங்கட்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடக்கும். நேற்றைய ஏலத்திற்கு 2737 மூட்டை பருத்தியை, விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். இதில், ஆர்சிஎச் ரகம் குவிண்டால் ₹4,950 முதல் ₹5650 வரையிலும், டிசிஎச் ரகம் ₹7127 முதல் ₹7619 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் 2737 பருத்தி மூட்டை ₹53 லட்சத்திற்கு விற்பனையானது.

Tags : Cotton auction ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து