×

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல், பிப்.18: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நாளை (19ம் தேதி) காலை 11 மணிக்கு நளா ஓட்டலில், மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் மத்திய இணையமைச்சர்  காந்திசெல்வன், முன்னாள் தேர்தல் பணிக்குழு செயலாளர் பார்இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்புஅணி அமைப்பாளர்கள், சிறப்புஅழைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் இளைஞர் எழுச்சிநாள் கொண்டாடுவது குறித்தும், கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகரம், பேரூர் பகுதியில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடத்துவது, சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Namakkal East District DMK Executive Committee Meeting ,
× RELATED ராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி