×

ராசி வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா

ஆத்தூர்,பிப்.18: ஆத்தூர்  அருகேயுள்ள மல்லியகரை ஈச்சம்பட்டியில் உள்ள ராசி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ  பள்ளியின் ஆண்டு விழா, பள்ளியின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில்  நடைபெற்றது.
பள்ளியின் முதல்வர் சுகிதா தினேஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.  விழாவில் சீனியர் அட்வகேட் ஹேமலதா  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சீனியர் அட்வகேட் பாலகோபால்,  பள்ளியின் செயலாளர் மாசிலாமணி, பொருளாளர் மணி, கல்விக்குழு தலைவர்  கனகராஜன், பள்ளியின் துணைத்தலைவர் ரங்கசாமி, இணைச் செயலாளர் ரவிக்குமார்,  இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், மதியழகன், குமரேசன், சுசீலா செல்லதுரை உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில்  தமிழ்நாடு பள்ளிக்கான மாநில ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கட் பால் அணியில் விளையாடி,  கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற, இப்பள்ளியின் மாணவர் சங்கரநாராயணன் மற்றும் பல்வேறு போட்டிகளில் தங்கம் வென்ற  மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட பெண்களின் வலிமை, பெண்களின்  முன்னேற்றம் போன்ற கருத்துகளை வலியுறுத்தும் விதமான கலைநிகழ்ச்சிகள்  நடைபெற்றன.


Tags : Rasi Vidyashram School Anniversary ,
× RELATED எம்பிபிஎஸ் மாணவி மாயம்