×

சேலம் மாவட்டத்தில் மரவள்ளிக்கான முத்தரப்பு கூட்டம்

சேலம், பிப்.18:சேலத்தில் மரவள்ளி கிழங்கிற்கு விலை நிர்ணயம் தொடர்பான முத்தரப்பு கூட்டம், நாளை மறுநாள் (20ம் தேதி) கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதுதொடர்பாக,  கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு விலை மற்றும் விற்பனை நிலை குறித்து கலந்து ஆலோசிப்பதற்கான முத்தரப்பு கூட்டம், நாளை மறுநாள் (20ம் தேதி) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.  இதில், அரசு துறை அலுவலர்கள், சேகோ மற்றும் ஸ்டார்ச் ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, இப்பொருள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர். எனவே, அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம், என கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : meeting ,woodworkers ,Salem ,district ,
× RELATED டெல்லியில் மதவழிபாட்டு கூட்டத்தில்...