×

பெரம்பலூரில் மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்

பெரம்பலூர்,பிப்.18: பெரம்பலூரில் மலைபோல் குவிந்து கிடந்த மார்க்கெட் கழி வுகளை தினகரன் செய்தி எதிரொலி விரைந்து அகற்றப்பட்டது.
பெரம்பலூர் பழைய பஸ் டாண்டின் வடபுறத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. வளாகத்தில் உள்ள வாடகைக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், தரைக்கடைகளுடன் சேர்த்து அதிலுள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளின் காய் கறிக் கழிவுகள் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு மேற்குப் பகுதியில் உள்ள சின்ன நடைபாதையில் தான் கொட்டப்படுகிறது. வேப்பந்தட்டை தாலுகா வைச்சேர்ந்தவர்களும், ஆத்தூர் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு செல்வோரும் இந்த நடைபாதையைத்தான் பெரிதும் பயன் படுத்துகின்றனர். மிகச்சிறிய அளவில் காணப்படும் இந்த நடைபாதையை பெரி தும் ஆக்கிரமித்தபடி மார்க்கெட் குப்பைகள் மலைபோல் கொட்டப்படுகின்றன. இதில் 80 சதவீதக் குப்பைகள் காய்கறிக் கழிவுகளாக உள்ளதால் அவற்றை உண் ண வருகின்ற மாடுகள், கிண்டிக் கிளறி குப்பைகளைப் பரப்பிவைத்து விடு கின்றன. அதோடு நகராட்சி நிர்வாகம் குறித்த காலத்தில் அவற்றை அப்புறப்படு த்தாததால் காய்கறிக் கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசி வருகின்றன. மேலும் அப்பகுதியில் பொதுமக்களுக்கான கட்டணமில்லா கழிப்பறை இல்லாததால் பாதசாரிகள் குப்பைகளின் மீதே சிறுநீர் கழித்துவிட்டுச் சென்று விடுகின்றனர்.

இதனால் அப்பகுதியில் சுற்றுப்புற சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. இதன் அபாயத்தை உணர்ந்து பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை விரைந்து அகற்றி சுத்தமான நகராட்சியாக மாற்ற நடவடி க்கை எடுக்கவேண்டுமென நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) தாண்டவமூர்த்தி உத்தரவின்பேரில் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலை மையில் பணிமேற்பார்வையாளர்கள் மோகன், சடையன், கோபி, ராஜ்குமார் ஆகியோர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை கொண்டு குவிந்து கிடந்த குப்பை மேடுகளை அகற்றி அப்புறப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் நோய் தொ ற்று பரவாதிருக்க குளோரின் பவுடர்களைத் தூவினர். செய்தி வெளியான மறுநாளே நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும், அதனை சமூக நலன் உடன் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பெரம்பலூர் நகர மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி