×

சீர்காழி பகுதியில் பழையாறு துறைமுகத்தில் இருந்து அதிவேக விசைப்படகுகளை உடனடியாக அகற்ற வேண்டும்

சீர்காழி, பிப். 18: சீர்காழி பகுதியில் இளநீர் வியாபாரி உடல் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலாக பப்பாளி மர தண்டை வினியோகம் செய்கிறார். சீர்காழி நகர் பகுதியில் கோடை வெயில் தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு இடங்களில் இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. பெரும்பாலான இளநீர் வியாபாரிகள் இள நீரை குடிப்பதற்கு பிளாஸ்டிக் ஸ்ட்ராவை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளநீர் வியாபாரம் செய்யும் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் காணப்படும். மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் ஸ்ட்ராவை பயன்படுத்தி இளநீர் குடித்தால் சுகாதாரக் கேடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் சற்று வித்தியாசமாக இளநீர் வியாபாரி ராமு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சீர்காழி தென்பாதி இமயவரம்பன் கார்டன் பகுதிக்கு செல்லும் வழியில் இளநீர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இவர் பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலாக பப்பாளி இலையின் தண்டு பகுதியை துண்டு துண்டாக நறுக்கி அதனை இளநீர் அருந்த பயன்படுத்தி வருகிறார்

இளநீர் குடிப்பவர்களுக்கு பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலாக பப்பாளி இலை தண்டு வழங்குவது சற்று வித்தியாசமாக இருந்தாலும் உடம்புக்கு எந்த தீங்கும் விளைவிக்காது என்பதால் பப்பாளி இலை தண்டை பயன்படுத்தி இளநீரை அருந்தி செல்கின்றனர்.
சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலாக பப்பாளி இலை தண்டு பகுதியை பயன்படுத்தும் இளநீர் வியாபாரி ராமுவை அனைவரும் பாராட்டி செல்கின்றனர். இதே போன்று அனைத்து இளநீர் வியாபாரிகளும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலாக இயற்கை தந்த பப்பாளி இலை தண்டு பகுதியை பயன்படுத்தினால் சுகாதார கேடு ஏற்படுவதை தடுக்கவும் முடியும். இளநீர் குடிப்பவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. இதனை அனைத்து இளநீர் வியாபாரிகளும் பின்பற்றினால் நாட்டுக்கும் நல்லது. நமக்கும் நல்லது. இதனை இளநீர் வியாபாரிகள் பின்பற்றுவார்களா. பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags : removal ,area ,Sirkazhi ,harbor ,
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...