×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பேரணி, ஆர்ப்பாட்டம் 30 பேர் மீது வழக்கு பதிவு

நாகை, பிப். 18: நாகையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், சென்னையில் போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்தும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட செயலாளர் முகமதுஅல்ஆதில் உட்பட 25 பேர் மீது வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகை மேலகோட்டை வாசல் பகுதியில் இருந்து பேரணி புறப்பட்டு அவுரித்திடலை வந்தடைந்தது. இவ்வாறு பேரணி நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன் உட்பட 5 பேர் மீது இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Tags : protest ,
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...