×

கரூரில்கிடப்பில் உள்ள சுற்றுவட்டசாலை திட்டம் செயல்படுத்தப்படுமா

கரூர், பிப்.18: கிடப்பில் உள்ள சுற்றுவட்டசாலை திட்டம் செயல்படுத்தப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகரை சுற்றி தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் கரூர்-நாமக்கல்-சேலம் பெங்களூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. பைபாஸ்சாலையை சுற்றி செல்லாமல் தூரத்தை குறைக்கவும், நெரிசலைப் போக்குவதற்காகவும் சுற்றுவட்டச்சாலை திட்டம் வரைவு செய்யப்பட்டது. சுற்றுவட்ட சாலை அமைக்க கடந்த 2013ம் ஆண்டு அரசாணை வெளியிட்டு ரூ.77கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான நில அளவைப்பணியும் முடிவடைந்தது. இந்நிலையில் ஆளும்கட்சியில் கோஷ்டிமோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. மாற்றுவழியில் அமைக்கப்போவதாக நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பும் அறிவிப்போடு நிற்கிறது. மாற்றுவழியில் சுற்றுவட்டசாலையை அமைக்கப்போவதாக நிலஅளவை செய்யும் பணி மட்டுமே நடைபெற்றது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வாங்கல், பழையூர்,. குப்பிச்சிபாளையம், மேலசக்கரபாளையம், கீழசக்கரபாளையம், மாரிகவுண்டம்பாளையம், வேலாயுதம்பாளையம், நல்லகுமாரன்பாளையம், காட்டூர், கோப்பம்பாளையம், கிராமங்களுக்கு செல்லும் வகையிலும், சுற்றுவட்டச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் மாற்றுவழி என்றனர். மாற்றுவழிதிட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அரசு நிதி ஒதுக்கிய திட்டத்திற்கே இந்த நிலைஎன்றால் நிதிஒதுக்கீடுபெறாத பல திட்டங்கள் உள்ளன. 2013ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு ரூ.77கோடி நிதி முதல்கட்டமாக ஒதுக்கப்பட்டது. வாங்கல் காவிரிபாலம் முதல்எல்லைமேடு வரை சுற்றுவட்டசாலை அமைக்க 2013ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டும் நிறைவேற்றாதநிலையில் மீண்டும் உத்தேசிக்கப்பட்ட வழியாக இருந்தாலும்சரி, மாற்றப்பட்ட வழியாக இருந்தாலும் சரி இடம் கையகப்படுத்துவது சிரமமாகவே இருக்கும். எனவே அறிவித்த திட்டத்தை துரிதமாக செயல்படுத்த வேணடும் என்றனர்.

Tags : Karurlikkipadu ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு