×

வெங்கமேடு மேம்பால பகுதியில் ரவுண்டானா அமைத்து விபத்தை தடுக்க வேண்டும்

கரூர், பிப்.18: வெங்கமேடு மேம்பால பகுதியில் ரவுண்டானா அமைத்து விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூரில் இருந்து சர்ச் கார்னர் வழியாக வெங்கமேடு செல்லும் சாலை பழைய சேலம் சாலையில் வெங்கமேடு மேம்பாலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜங்ஷன், ஐந்துரோடு செல்லும் வாகங்கள் பிரிந்து செல்கின்றன. கனரக வாகனங்கள் முதல் சிறிய வாகனங்கள் வரை சென்று வருகின்றன. மேம்பாலம் அருகே காலை மாலை வேளைகளில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. வாகனங்கள் முட்டிமோதிக்கொள்கின்றன. எந்நேரமும் போலீசார் இருந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டியதிருக்கிறது. எனவே மேம்பால பகுதியில் நெரிசலை போக்கவும், விபத்துக்களை தடுக்கவும் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Roundabout ,area ,Venkamedu ,accident ,
× RELATED லடாக் பகுதி தொடர்பாக பொய் சொல்வது யார்?... ராகுல் காந்தி கேள்வி