×

ஆபரேட்டர் அஜாக்கிரதையால் மினி குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வீணாகும் அவலம்

கரூர், பிப்.18: கரூர் கருப்பாயிகோயில் தெருவில் மினிகுடிநீர் தொட்டியில் தண்ணீர்நிரம்பி வீணானதால் குடிநீரை சிக்கனமாக கையாள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் கருப்பாயிகோயில் தெரு இறக்கத்தில் பொதுமக்கள் உபயோகத்திற்காக ஆழ்குழாய் அமைத்து சின்டெக்ஸ் தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு நேற்று நீரேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. எனினும் தொட்டி நிரம்பியும் மோட்டாரை நிறுத்தவில்லை. இதனால் தண்ணீர் வழிந்து அருகில்உள்ள வடிகாலில்போய் வீணானது. நீண்டநேரத்திற்கு பின்னரே மோட்டார் நிறுத்தப்பட்டது. சம்மந்தப்பட்டவர்களின் அஜாக்கிரதையால் மின்சாரம் அதிக செலவாவதுடன், குடிநீரும் வீணானதைக் கண்டு சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்தனர்.

தினமும் இதேபோல் குடிநீர் தொட்டி இயக்குனர் மோட்டாரை போட்டுவிட்டு தண்ணீர் நிரம்பியதும் அணைக்காமல் சென்று விடுவதாகவும், இதனால் தண்ணீர் வீணாவதாகவும் கூறப்படுகிறது. தற்போது கோடைகாலம் வருவதை கருத்தில்கொண்டு குடிநீரை உள்ளாட்சி மன்ற நிர்வாகங்கள் முதலில் சிக்கனமாக கையாளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : operator ,
× RELATED திருச்சியில் தனியார் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்